துல்லியமாக நேரத்தை கணக்கிடும் ஆப்டிக்கல் கடிகாரம்

ஜூன் 23, 2016

0

Clock_web_1024

தற்பொழுது காலத்தை அளவிட ஒரு நிமிடம் (60 நொடிகள்), ஒரு மணி நேரம் (60 நிமிடங்கள்) மற்றும் ஒரு நாள் (24 மணிகள்) எனும் வரையறை கொண்ட கால அளவையைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சுவாரசியமாக, 24 நிமிடங்களால் ஆன ‘நாழிகை’ எனும் கால அளவையைத்தான் பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி வந்தார்கள். மேலும், பகல் பொழுது 30 + இரவுப்பொழுது 30 சேர்ந்து 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள் என்றும் கணக்கிட்டனர். முக்கியமாக, ‘குறுநீர்க் […]

காத்திருக்கும் ஆபத்து – சிவப்பு பெரும் பூதம்

ஜூன் 23, 2016

0

solar-system-new-habitable-zone-red-giant-800x600

அன்றாட வாழ்க்கைக்கும், உணவுக்கும் சூரிய வெளிச்சத்தை நம்பி வாழும் மனிதனுக்கு அந்த சூரியன் மற்றும் வானத்தில் மின்னும் இதர நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் அறிவு அவசியம் என்பதை சங்க இலக்கியங்கள் படைத்த நம் தமிழ்ச் சான்றோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு, “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்…” (புறநானூறு:30) எனத் தொடங்கும் சூரிய மண்டலம் குறித்த புறநானூற்றுப் பாடல் ஒரு சோற்றுப் பதம்! ஆக, சூரியன் மற்றும் சூரிய மண்டலம் குறித்த அடிப்படை அறிவு […]

நோய்களைக் கண்டறியும் கையடக்க ‘ஸ்பார்ட்டான் கியூப்’!

ஜூன் 22, 2016

0

cube-dimensions

இணையத் தொடர்புடன் கூடிய கையடக்க கணினிகளான ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளின் வருகையால் உலகம் உள்ளங்கைக்குள்ளேயே சுருங்கிவிட்டது என்பது மிகையல்ல கண்கூடான நிதர்சனம். ஏனென்றால், ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும் உணவு முதலான சகல சவுகரியங்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே அனுபவித்து விடலாம் என்பதுதான் இன்றைய எதார்த்தம். ஆனாலும் மனித வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களான திடீரென்று நோய்வாய்ப்படுதல் மற்றும் விபத்துகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது உதவ வேண்டிய மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டியது […]

மிருதுவான ரோபாட்களை உருவாக்கும் ரப்பர் தசைகள்.

ஜூன் 22, 2016

0

உலகம் வேகமாக ரோபாட் மயமாகி வருகிறது. இன்னும் சில வருடங்களில் மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் செய்யும் ரோபாட்களை, பொதுவிடங்கள் அல்லது நம் பணியிடங்களில் சந்திக்க, கடந்துபோகவேண்டிய சூழல் வந்துவிடும். அதனால் மனிதர்களுடன் பணியாற்றும், மனிதர்களுக்கு உதவும் ரோபாட்கள் மனிதர்களைப் போன்றே மிருதுவான உடலோடு இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி அத்தகைய ரோபாட்களை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் உலக ரோபாட்டிக் தொழில்நுட்பத் துறை பொறியாளர்கள். ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்று மனித […]

விண்வெளியில் உயிா் மூலக்கூறு!

ஜூன் 22, 2016

0

பூமியில் பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, அதன் காரணமாக அதிகரித்துவரும் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள், அவற்றால் உண்டாகும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் போன்றவை மற்றும் அதிவேகமாக நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய பல காரணங்களால் மனிதன் தன் பெட்டி, படுக்கையைக் கட்டிக்கொண்டு நிலவுக்கு போய் வாழலாமா அல்லது செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களில் வாழலாமா என்று சிந்தித்து வரும் நவீன காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும், பூமியில் உயிர்கள் தோன்றியது எப்படி என்ற […]

நரம்பு மறுவளர்ச்சி சாத்தியமே

ஜூன் 22, 2016

0

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், விண்வெளிக்கு சுற்றுலா சென்று வருவது, நிலவில் வாழ்வது, மனிதனுக்கு நிகராக இயங்கும் செயற்கை மனிதர்களை உருவாக்குவது என கிட்டத்தட்ட எல்லாமே சாத்தியமாகி வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவம் என்று வரும்போது பல இடங்களில் தொழில்நுட்பம் கை கொடுப்பதில்லை என்ற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. உதாரணமாக, அல்ஷெய்மர்ஸ், டிமென்ஷியா உள்ளிட்ட பல நரம்பியல் நோய்கள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டால் இறுதிவரை அவற்றோடுதான் வாழ்ந்தாக வேண்டும். ஏனென்றால் நரம்புகள் ஒருமுறை சேதமடைந்த அல்லது சிதைவுற்ற பிறகு […]

உலகம் சுற்றும் “சூரிய விமானம்”

ஜூன் 22, 2016

0

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன். பறவைகள் எப்படி பறக்கின்றன என்று உற்றுநோக்கிய மனிதன், பறவைகள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி நாமும் பறப்பதற்கு ஓரு வாகனத்தை உருவாக்கினால் என்ன என்று சிந்தித்து செயல்பட்டான். அதன் பலனாகவே இன்று பல ஆயிரம் மைல்களை சில மணி நேரங்களில் கடந்து செல்லக்கூடிய விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன! கடந்த 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று ரைட் சகோதரர்களின் உதவியுடன் அதிகபட்சமாக 852 அடி தூரத்தை, […]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 271 other followers